கொரோனாவை தடுக்க புதிய சட்டம் வர வாய்ப்பு…
கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிக்கப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிவது தனி மனித இடைவெளி பின்பற்றுவது போன்றவை கட்டாயமாகப்பட்டுள்ளது. இது போன்ற தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அந்த அந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் கொடுக்கப்பட்டு மக்கள் கூட்டம் பொது இடங்களில் அதிகரித்து உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது 500 முதல் 5000 வரை அபராதம் விதிக்க புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இந்த புதிய சட்டம் தமிழக சுகாதாரத்துறையின் தொற்றுநோய் தடுப்பு சட்டபிரிவின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.ஏற்கனவே டெங்கு போன்ற பரவும் நோய்களை ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என்று நடைமுறை உள்ளதை போன்று கொரோனா தொற்று நோய் தடுப்பு நடைமுறைக்கும் அபராத விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது.இந்த புதிய கொரோனா தடுப்பு சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முக கவசம் தனி மனித இடைவெளி கட்டாயம் ஆக்கப்படுகின்றது.இதை பின்பற்றாத தனி நபர்கள் மீது 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
தொழிற்சாலைகள், மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தளங்கள் ,போக்குவரத்து இடங்கள் போன்ற அரசு அறிவித்துள்ளது போன்று தடுப்பு நடவடிக்கள் பின்பற்ற வேண்டும். அந்த அந்த நிறுவனங்கள் தினமும் கிருமி நாசினி கொண்டு வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும்.மக்கள் பயன்பாட்டிற்கு வெளியே கிருமி நாசினி வைக்க வேண்டும்.தொழிற்கூடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும் இப்படி அரசு அறிவித்துள்ளகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது எந்த விதியை பின்பற்ற வில்லையோ அதற்கு தகுந்தாற்போல தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.புதிய சட்டத்தில் அபராதம் மட்டுமே உள்ளது சிறை தண்டனை பற்றிய அறிவிப்புகள் இல்லை. இந்த புதிய தொற்று நோய் தடுப்பு சட்டம் வரைவு செய்யப்பட்டு ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளது. அனுமதி பெற்று இன்னும் ஒரிரு நாட்களில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது