கூடங்குளதில் மின்உற்பத்தி நிறுத்தம்.. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 465 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது..!!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் முதல் மற்றும் 2-வது அணுஉலைகளில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகளுக்காகவும், அணுஉலைகளில் பயன்படுத்திய எரிகோல்களை மாற்றிவிட்டு புதிய எரிகோல்களை பொருத்தும் பணிகளுக்காகவும் மின்உற்பத்தி 2 மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது.அந்தவகையில் முதலாவது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும், புதிய எரிகோல்களை பொருத்தும் பணிகளுக்காகவும் இன்று நிறுத்தப்பட்டது. இந்த அணுஉலையில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்றுவந்த நிலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 465 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.
பராமரிப்பு மற்றும் புதிய எரிகோல்கள் பொருத்தும் பணிகளுக்குப்பின் இன்னும் 2 மாதத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கும் என்று அணுமின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.