கிராம்பில் கவனிக்க வேண்டியவை என்ன?
இந்தியாவில் ஒரு கப் தேநீர் அருந்த உங்களுக்கு எந்தவிதமான காரணமும் தேவையில்லை. ஆனால் தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களைப் பற்றி நாம் கவனமாக இருப்பது மிகவும் முக்கியமானது. தேநீர் மிகவும் ஆரோக்கியமான பானமாக உள்ளது. ஆனால் நீங்கள் அதில் சர்க்கரையை சேர்க்கும் போது அது, ஊட்டச்சத்தை இழக்கத் தொடங்குகிறது.திர்ஷ்டவசமாக உங்கள் தேநீர் குடிக்கும் அனுபவத்தை ‘ஆரோக்கியமாக்க’ பல வழிகள் உள்ளன. அதற்கு உங்கள் அன்றாட சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களே போதுமானது. தேநீரில் மசாலாக்கள் சேர்த்து மசாலா தேநீர் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக கிராம்பு அத்தகைய ஒரு மசாலா. கறுப்பு / பழுப்பு நிறத்தில் நறுமணமுள்ள ஒரு சிறிய மூலிகைப்பொருள் தான் கிராம்பு!.
உங்கள் தினசரி தேநீர் தயாரிப்புகளில் கிராம்பை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை குறித்து இங்கு விரிவாக காண்போம்.கிராம்பு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. அவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன.கிராம்பிலிருந்து பெறப்பட்ட யூஜெனோல் என்ற எண்ணெய் மூலிகை சேர்மத்தின் நல்ல மூலமாகும்.கிராம்பின் வலுவான கிருமி நாசினிகள் பண்புகள் பல்வலி, ஈறுகள் பிரச்னை மற்றும் அல்சர் போன்ற வயிற்று புண்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.கிராம்புகள் கிருமி நாசினிகள், வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் செறிவூட்டப்படுகின்றன. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை தொண்டை புண், சளி, இருமல் மற்றும் தலைவலி குணமாக உதவி செய்கிறது.
கிராம்பில் உள்ள யூஜெனோல் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆரோக்கியமான செரிமானம் எடை இழப்புக்கு முக்கிய காரணியாகும். மேலும் கிராம்பு இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.கட்டற்ற தீவிர செயல்பாட்டை எதிர்த்துப் போராடுவதன் மூலம் கிராம்பு உங்களுக்கு ஒரு அழகான சருமத்தை கொடுக்க உதவும்.கிராம்பு மசாலா இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். ஜர்னல் நேச்சுரல் மெடிசின் நடத்திய ஆய்வில், நீரிழிவு எலிகளுக்கு கிராம்புகளை கொடுத்து சோதனை செய்ததில் இரத்த சர்க்கரை அளவு குறைவதாக நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்தன என தகவல் அளித்துள்ளது.
கிராம்பு வாங்கும் போது பெரிய கிராம்புகளை தேர்ந்தெடுங்கள். அதாவது நீங்கள் தலையையும் தண்டுகளையும் தெளிவாக பார்க்கும் வகையில் வாங்குங்கள். பின்னர் அவற்றின் நிறத்தைப் பாருங்கள். அவை சிவப்பு-பழுப்பு நிறமாக இருந்தால், நன்றாக இருக்கின்றன என்று அர்த்தம்.இது தவிர, மொட்டின் நான்கு இதழ்கள் மற்றும் அவற்றின் உள்ளே இருக்கும் மகரந்தங்களை நீங்கள் அடையாளம் காண முடியும். சிறிய குச்சிகளைப் போல இருக்கும் கிராம்புகளை வாங்க வேண்டாம், ஏனெனில் அவை வெறும் தண்டுகள். காற்று புகாத சேமித்து, ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து விலகி இருந்தால் ஒரு வருடம் கூட கிராம்பு கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.