காலையில் மீந்து போன சப்பாத்தியை வைத்து மாலையில் சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி – 3
வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
- வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
- பிறகு இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்
- பிறகு வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸ் இதனுள் சேர்க்கவும்
- குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- விருப்பப்பட்டால் இதனுடன் முட்டை அல்லது விருப்பப்பட்ட காய்கள் சேர்த்து கொள்ளவும்