கொரோனா தொற்றுக்கு முன்பு விடியற்காலை 2 மணிக்கு மேல்தான் காய்கறி விற்பனை தொடங்கும். அதனால் காய்கறி வியாபாரிகள் சங்கங்கள் காய்கறிகளின் வரத்தை வைத்து கூடி பேசி ஒரே விலையை நிர்ணயம் செய்ய முடியும். ஆனால் தற்போது இரவு 10 மணிக்கே வியாபாரம் தொடங்குகிறது. அதுவும் பகுதி பகுதியாகத்தான் விற்பனை நடைபெறுகின்றது.
மேலும், ஏலம் முறை குறைந்ததாலும் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறுவதாலும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் முறையை கடைபிடிக்க முடிவதில்லை என்றும் அதனால் காய்கறிகளின் விலை கடைக்கு கடை மாறுபடுவதாக காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காய்கறி சந்தையில் கடைகளை விரிவுபடுத்தி சில்லரை வியாபாரத்தை அதிகரித்தால்தான் காய்கறிகளின் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தாலும், மக்கள் முகக்கவசங்களை அணிந்து தனி மனித இடைவெளியை தொடர்ந்து பின்பற்றும் பட்சத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.