விளையாட்டு

களமிறங்கிய மெஸ்ஸி.. ரசிகர்கள் உற்சாகம்…

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக மீண்டும் களமிறங்கியதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.அர்ஜெண்டினா கால்பந்து வீரரான இவர், ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக 16 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறார்.

கடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் பேயர்ன் மியூனிக் அணிக்கு எதிராக பார்சிலோனா படுதோல்வி அடைந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர், அணியின் இருந்து தன்னை விடுவிக்குமாறு அதன் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்.இருப்பினும், பார்சிலோனா நிர்வாகம் மேற்கொண்ட பேச்சுவாத்தையில் சமாதானமாகி, ஜிம்னாஸ்டிக் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் முதல்முறை களமிறங்கினார். இப்போட்டியில் பார்சிலோனா 3-க்கு 1 என வெற்றிபெற்றது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.