கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை…
பள்ளிகள் திறப்பது பாடத்திட்டங்கள் குறைப்பு உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் 300க்கும் அதிகமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.அரசு சார்பாக தொலைக்காட்சிகளில் எடுக்கும் பாடங்களையொட்டியே பொதுத்தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும் என்று கூறிய அவர் தனியார் பள்ளிகளிலிருந்து 2.5 லட்சம் மாணவர்கள் அரசுபள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.