கயத்தாறு வன்கொடுமை – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓலைக்குளம் கிராமத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் பால்ராஜ் என்பவரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பால்ராஜ் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓலை குளம் கிராமத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் பால்ராஜ் என்பவரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வளங்களையில் பரவி சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கு உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கயத்தாறு காவல்நிலையத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் பால்ராஜ் , சிவசங்கு ஆகியோர் இடையே ஆடு மேய்ப்பதில் பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பான பிரச்சினையில் சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள் பால்ராஜை காலில் விழ வைத்தது, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
இது அநாகரிகமான செயல் என்றும், பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலையத்தில் இது தொடர்பாக சிவசங்கு உள்ளிட்ட 7 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,பால்ராஜ் குடும்பத்திற்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார். பேட்டியின்போது கோவில்பட்டி டி.எஸ்.பி.கலைக்கதிரவன் உடனிருந்தார்.