தமிழ்நாடு
கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் – பஞ்சமாதேவி வாய்க்காலில் புதர்களை அகற்ற வேண்டும்.
கரூர்: கரூர் அருகே, திருக்காம்புலியூர் பகுதியில், அமராவதி ஆற்றில் இருந்து ராஜவாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான நிலம் பாசன வசதியை பெறுகிறது. நெல், மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்நிலையில், பஞ்சாமாதேவி அருகே, சிறிய பாலம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் உள்ளன. மேலும், ராஜவாய்க்காலில் முட்புதர்கள் அதிகளவில் உள்ளதால், கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சமாதேவி ராஜவாய்க்கால் பகுதியில் உள்ள, முட்புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.