சென்னைதமிழ்நாடு

‘ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைவு..! வெள்ளியின் விலையும் கடும் வீழ்ச்சி!!

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மளமளவென குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.38 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக தங்கம் விலை இன்று கிடுகிடுவென ரூ. 832 சரிந்துள்ளது.

கிராமுக்கு ரூ.104 குறைந்து ரூ.4,644-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.832 சரிந்து ரூ.37,152-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,800 குறைந்து ரூ.64,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.