சென்னை

“ஒரே எதிரி திமுக” – அமைச்சர் விஜயபாஸ்கர்…

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தலை இதய சக்தியோடு வலுவோடு எதிர்கொள்வோம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். மேலும் அதிமுக மகத்தான மக்கள் இயக்கம். இங்கு மக்கள் ஆட்சி தான் நடைபெறுகின்றது. நாடே எதிர்பார்த்த ஒன்று. இந்த அறிவிப்பை இந்தியாவே உற்று நோக்கிக்கொண்டிருந்தது. அதிமுக ஒரு வலுவான இயக்கம்.எதிர்பார்த்த அறிவிப்பை, தேர்தல் சூடு பிடிக்கும் நேரத்திலே தலைமை கழகம் சார்பில் அறிவித்துள்ளோம்.  ஒரே எதிரி திமுக அதனை வலுவோடு எதிர்கொள்வோம் வெற்றி கொள்வோம் என கூறியுள்ளார். முன்னரே செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், நான் தான் முதலமைச்சர் என்பதை எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் சொல்லவில்லை. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்ட முடிவு. இந்த அறிவிப்பு அடுத்த தேர்தலில் அமோக வெற்றியை இரட்டை இலை பெரும் என்பதை உறுதி படுத்தியுள்ளது. வரக்கூடிய அனைத்து தேர்தலிலும் இவர் தான் வேட்பாளரா எனும் கேள்விக்கான பதிலை கழகம்தான் முடிவு செய்யும் என கூறினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.