ஏலக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்…
ஏலக்காய் வெறும் வாசனைக்காக சேர்க்கப்படும் பொருள் அல்ல. அதில் பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. அவை என்னென்ன தெரியுமா..? ஏலக்காய் வாய் துர்நாற்றத்திற்கு நல்லது. அதேசமயம் பல் வலி, ஈறுகளில் உண்டாகும் வீக்கம் போன்றவற்றைக் குறைக்கவும் உதவும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றது. சுவாசப்பாதையை சீராக்கி சுவாசக் கோளாறுகளை குணமாக்கும். இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஏலக்காய் நல்லது. சளி, இருமல், தொண்டை கரகரப்பு இருப்பின் ஏலக்காயை கொதிக்க வைத்து தேன் கலந்து சூடாகப் பருகி வர நீங்கும்.
பசி எடுப்பதில்லை, சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை எனப் புலம்புவோர் சாப்பிடுவதற்கு முன்பு , பின்பு என ஏலக்காய் சாப்பிட சரியாகும். ஏலக்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்லது என்கின்றனர். எனவே அதை முகப் பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம். அதேபோல் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெயில் இரண்டு சொட்டு விட்டு மசாஜ் செய்வதும் நல்லது. வாயில் எதையாவது மென்று கொண்டே இருக்கும் பழக்கம் இருப்போர் சூயிங்கம், சாக்லெட் என மென்றுக்கொண்டிருக்காமல் ஒரு ஏலக்காயை போட்டு மென்றால் ஆரோக்கியத்திற்கும் நல்லது.