உணவில் ஏன் முதலில் காரத்தையும், இனிப்பை இறுதியிலும் சாப்பிட வேண்டும்?
விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படும் .பின்னர் தான் உணவு பரிமாறப்படும். ஏனெனில்,இனிப்பு உண்ணும் போது உமிழ்நீர் சுரப்பதால், உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்.பின்பு உணவை அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக, உமிழ் நீருக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும்.
சிலர் எதனை கல்யாண வீடுகளில் விருந்தினர் அதிகம் சாப்பிட கூடாது என திட்டமிட்டு செய்வதாகவும் கூறுவர்.அதாவது இனிப்பு அதிகம் சாப்பிட்டால் நாம் மந்தமாக உணர்வோம். சாப்பாடு குறைச்சலாகவே சாப்பிடுவோம்.
காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு சில இனிப்பு வகைகளை உட்கொள்வது வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது .இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல வழிவகுக்கும்.
இனிப்பை அதிகமாக சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டால் அது நம் சீரணத்துக்கு உதவும்.இல்லையென்றால் இனிப்புகளில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் செரிமானத்தை அதிக சிக்கலாக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு காரணமும், அறிவியலும் இருக்கிறது. இப்போதிருக்கும் விஞ்ஞானி கண்டறிந்ததை நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டு அறிந்ததோடு மட்டுமில்லாமல் நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும் அவற்றை பின்பற்றும்படி செய்துள்ளனர்.