எம்.பி திருச்சி சிவா வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு…
விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளூமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி திமுக எம்பி திருச்சி சிவா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வேளாண் திருத்த மசோதாக்களை தேர்வுக்குழு அல்லது நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்காமலும், மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் இந்த சட்டத்தை நிறைவேற்றினால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படும் என்பதால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களும் அரசியலமைப்புக்கு எதிரானது என உத்தரவிடும்படி மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள காங்கிரஸ் எம்.பி., மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இவை விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.