எண்ணெய் கடலாக மாரிய இந்தியப் பெருங்கடல்…
வகான்ஷியோ கப்பலில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு, இந்தியப் பெருங்கடலில் டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெயை கசிந்து வருவதால், மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர்கொண்டிருந்தது. டன் கணக்கிலான எண்ணெய் கடலுடன் கலந்தாலும், தொடர்ச்சியான சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. இந்தியா மொரீசியஸுக்கு அனுப்பிய உதவிகளை பார்ப்போம்.
இந்தியக் கடலோர காவல் படையில் இருந்து 10 நபர்கள் அடங்கிய குழுவையும், 10,000 என்ணெய் உறிஞ்சும் பேடுகள் அடங்கிய 30,000 டன் எடையிலான உதவிக் கருவிகளையும் அனுப்பியுள்ளது இந்திய அரசு. மொரீசியஸ் அரசின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய விமானப் படையின் சி17 க்ளோப் மாஸ்டர் விமானத்தில் உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. Ocean Booms, River Booms, Disc Skimmers, Heli Skimmers, Power packs, Inflators, Blowers, Salvage barge மற்றும் 10000 oil absorbent pads ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமான சாகர் திட்டத்தின் அடிப்படையில், மனிதநேய அடிப்படையிலும், அண்டை நாடுகளின் பேரழிவு நிவாரணத்தின் அடிப்படையிலும் இந்த உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த அவசர கால உதவி இந்தியா மற்றும் மொரீசியஸுக்கு இடையிலான நட்புறவை உணர்த்துவதாகவும், மொரீசியஸ் மக்களின் அவசரகால தேவையின்போது இந்தியா உடன் இருக்கும் என அளித்த வாக்குறுதியின்படியும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.