டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு நேற்று சச்சின் உள்ளிட்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பலர் பதிலடி கொடுத்து இருந்தனர். அவர்களின் கருத்துகள் அனைத்தும் இந்திய இறையாண்மை, ஒற்றுமை எனப் பல விஷயங்களைக் கொண்டு இருந்தாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த நெட்டிசன்கள் நேற்று முதல் இந்தியக் கிரிக்கெட் வீரர்களை தீட்டி தீர்த்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக ரஷ்யாவின் முன்னணி டென்னிஷ் வீராங்கனையான மரிய ஷரபோவோவிடம் சில நெட்டிசன்கள் மன்னித்து விடுமோறு கோரிக்கையும் வைத்து இருக்கின்றனர். காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு “சச்சின் என்றால் எனக்கு யாரென்றே தெரியாது“ என ஒரு பேட்டியில் மரிய ஷரபோவே பதில் அளித்து இருந்தார். இதனால் அப்போது கோபம் அடைந்த பல லட்சக்கணக்கான இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் அவரின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சில தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தனர்.
தற்போது சச்சின் மீது இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக பல இந்திய நெட்டிசன்கள் மரிய ஷரபோவிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் கடவுளின் சொந்த நாடான கேரளாவிற்கு வர வேண்டும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின் திருச்சூர் பூரம் பண்டிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்து மன்னிப்பு கோரி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இன்னொரு பதிவில், ஷரபோவா நீங்கள் சச்சினை பற்றி சரியாகத்தான் கூறியுள்ளீர்கள். தரமான மனிதர் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது எனப் பதிவிட்டு உள்ளார். ஆதோடு ஐஸ் வைக்கும் ஒரு நெட்டிசன் ஒருவர், குழிமந்தி பிரியாணியைத் தந்து மன்னிப்புக் கோருகிறேன். ஒரு லாரி நிறைய மன்னிப்பு ஏற்றி வருகிறேன் எனப் பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த மரிய ஷரபோவே விளையாட்டாக யாருக்கேனும் ஆண்டுகள் மறந்து விட்டதாக எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.