உலக சுகாதார அமைப்பின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது..!
வாஷிங்டன் : கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை உலக சுகாதார அமைப்பின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனாவின் முயற்சிக்கும் என நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்; அது சீனாவில் உள்ள பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டது’ என, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு, விரைவில் நடக்கிறது. இதில், விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து, ஆஸ்திரேலியாமற்றும் ஐரோப்பிய யூனியன் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்தத் தீர்மானத்திற்கு, இந்தியா உட்பட, 100க்கும் நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.’கொரோனா வைரஸ் பாதிப்பில், உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்பால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நாம் பெற்ற பாடங்கள் குறித்து, சுதந்திரமாக, விரிவாக மதிப்பிடப்பட வேண்டும். ‘ஏற்கனவே உள்ள நடைமுறைகள் அல்லது புதிய நடைமுறைகள் மூலம், இந்த வைரஸ் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’ என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதுஇந்த தீர்மானத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த தீர்மானம் தவறானது. கொரோனா வைரசுக்கு எதிரான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியது. இதன்பின்னர், உலக சுகாதார மைய கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசும் போது, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், விரிவான விசாரணை நடத்துவதை சீனா வரவேற்கிறது. இந்த விசாரணை அறிவியல் மற்றும் துறை ரீதியாக நடத்தப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் தலைமையில் விசரணை நடக்க வேண்டும் எனக்கூறினார்.இதன் மூலம், கொரோனா விவகாரத்தில் நடக்கும், விசாரணையில், ஏற்படும் விளைவுகளை தவிர்க்க சீனா அரசிற்கு பல வழிகளை வழங்க ஜிங்பிங் முயற்சிப்பதுடன், முடிவுகளை சீனாவிற்கு சாதகமாக மாற்றவும் அவர் முயற்சிக்கலாம் என நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.