பிரித்தானியாவில் அறிவுக் கூர்மையால் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உலக அளவில் சாதனை படைத்து தன்னுடைய பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார், பிரித்தானியாவில் வசிக்கும் 11 வயதே ஆகும் தமிழ் சிறுமி ஹரிப்பிரியா.
உலகின் தலை சிறந்த அறிவியாளர்களாக கருதப்படும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்றவர்களின் அறிவுக் கூர்மை, அதாவது IQ மதிப்பிட்டை விட, 2 மதிப்பெண் அதிகமாக பெற்ற பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார்.
இந்த சாதனையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஹரிப்பிரியா?
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்று நிறைய சாதனைகள் படைப்பேன். படித்ததை நான் ஞாபகம் வைத்து கொள்வதற்காக என் அம்மாவிடம் அதைப் பற்றி பேசுவேன், என்னுடைய நண்பர்களிடம் அதிகம் ஷேர் செய்வேன்.
அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பிடித்து உட்கார வைத்து கேட்க வைப்பேன். இதைப் பற்றிய செய்தி வந்தவுடன் முதலில் என் நண்பர்கள் எல்லோரும், ஐன்ஸ்டீன்…ஐன்ஸ்டீன் என்று கூறினர், அதன் பின் இப்போது வழக்கம் போல் என்னுடன் பேசி வருகின்றனர்.
அதைத் தவிர, நடனம், பியானோ வாசிப்பது, நீச்சல் போன்ற திறமைகளும் இருக்கிறது, இதனால் உங்களுக்கு கொஞ்சம் மன அழுத்தம் இருக்காதா? என்ற போது அவர் இதெல்லாம் எனக்கு சர்வசாதாரணம், முதலில் கஷ்டமாக இருந்தது,அதன் பின் இதெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. எனக்கு சீக்ரெட் சொசைட்டி எம்ஐ 6 ஆக வேண்டும் என்பது தான் ஆசை என்று கூறியுள்ளார்.
ஹரிப்பிரியாவின் தந்தை ராதா கிருஷ்ணனிடம் இது எப்படி சாத்தியமானது? என்று கேட்ட போது, பிரிட்டிஷ் வின்சா என்ற இயக்கம் ஐகியூ தேர்வை நடத்துகிறார்கள்.
இந்த தேர்வை 10 வயதிற்கு மேல் உள்ள யார் வேண்டும் என்றாலும் எழுதலாம், இதில் ஹரிப்பிரியா எடுத்த 162 மதிப்பெண் என்பது மிகப் பெரிய மதிப்பெண்ணாக, சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஹரிப்பிரியாவின் அம்மா திவ்யா மகளைப் பற்றி கூறுகையில், அவளுக்கு 3 வயது இருக்கும் போது எந்த ஒரு விஷயத்தை பார்த்தாலும், அதை உடனடியாக செய்யும் திறன் அவளிடம் இருந்தது.
இவளுக்கு அதைப் பற்றி தொடர்ந்து சொல்லி கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஒரு தடவை எது தேவையோ, அந்த விஷயத்தை சொல்லிக் கொடுத்தாள், கற்று கொள்வாள்.
மற்றவர்கள் ஒரு செயலை செய்வதற்கு 10 நிமிடம் எடுத்துக் கொண்டால், அதே செயலை என் மகள் புரிந்து கொண்டால் என்றால் 3 முதல் 5 நிமிடத்தில் முடித்துவிடுவாள்.
அவள் ஒரு புக்கை படித்து கொண்டிருக்கிறாள் என்றால், அப்போது அவளை நான் ஏதாவது வேலை செய்ய கூப்பிட்டாள், அதை முடிக்காமல் வரமாட்டாள், அது தான் கொஞ்சம் இவளிடம் பிரச்னை.
பிரித்தானியாவை பொறுத்தவரை இங்கிருக்கும் பள்ளியில் இவன் தான் நல்லா படிப்பவன், இவன் படிக்கமாட்டான் என்றெல்லாம் மாணவர்கள் முன் ஆசிரியர்கள் கூறமாட்டார்கள். சொல்ல போனால் அங்கிருக்கும் மாணவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் மாணவனின் மதிப்பு கூட தெரியாது.
அந்தளவிற்கு அவர்கள் பெற்றோர் மற்றும் அவரின் குழந்தைகளை மட்டும் அழைத்து மார்க், எப்படி படிக்கிறாள் என்பதை கூறுவார்கள் என்று கூறி முடித்தார்.