வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் தீ குளிக்க முயற்சி நடந்துள்ளது, அதை துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர் பெண் போலீசார். சட்டென உடலில் தீ வைக்கப் போன ஆட்டோ டிரைவர்.. தைரியமாக வந்து காப்பாற்றிய பெண் போலீஸ் – வீடியோ வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுங்கந்தாங்கள் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தண்டபாணி (46) என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக போர்ட்டிகோவில் இன்று மதியம் சுமார் 1.40 மணி அளவில் திடீரென மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீ குளிக்க முயற்ச்சித்தார்.
இதனை கண்ட ஆட்சியர் அலுவலக போர்ட்டிகோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர்கள் லதா மற்றும் பிரேமா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு மண்ணெண்ணை கேனை தட்டிவிட்டு அவரை பிடித்து தீ வைத்துக்கொள்ளாமல் தடுத்து நிறுத்தினர். லிவ்விங் டு கெதர்.. கல்யாணம் செய்ய மறுத்த சென்னை இளைஞர்.. பாடம் கற்பித்த இளம் பெண் ! இது குறித்து விசாரிக்கையில், கே.வி.குப்பம் காவல் துறையினர் தன் மீது போலி வழக்கு போட முயற்ச்சிப்பதாக கூறி மிரட்டுவதாகவும், குடும்ப பிரச்சனை காரணமாக புகார் அளிக்க சென்றால் காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டினார். மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தண்டபாணியை சத்துவாச்சாரி காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் நபர் ஒருவர் தீ குளிக்க முயற்ச்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தீ குளிக்க முயற்சித்த தண்டபாணியை தடுக்க முயன்ற ஆயுதப்படை பெண் காவலர்கள் பிரேமா மற்றும் லதா ஆகியோருக்கு கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.