இழுத்து மூடப்படுமா “டிக்டாக்”? குறையும் ஸ்டார் ரேட்டிங்.!
இணையத்தில் புதியதாக அறிமுகமாகும் செயலிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைப்பது இயல்பான ஒன்று. அப்படி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு செயலி டிக்டாக். பாடல்கள், படக்காட்சிகள், சொந்தமாக கிரியேட் செய்து வெளியிடப்படும் வீடியோக்கள் என்று திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு செயலியாக டிக்டோக் செயல்பட்டு வந்தது. ஆரம்பகாலத்தில் நடிகர்களின் பாடல்கள், வசனங்களுக்கு ஏற்ப பாவனை செய்து வந்த பயன்பாட்டாளர்களின் போக்கு, நாளடைவில் மாறத் தொடங்கியது.
டிக்டாக் செயலியில் ஆபாசம் பெருக்கெடுத்தது. பெரும்பாலானவர்கள் இந்த செயலியைப் பயன்படுத்துவதில் இருந்து பின் வாங்க ஆரம்பித்தார்கள். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தைகளுடன் ஆபாச வீடியோக்கள், பாடல் காட்சிகளுக்கு அதிக ஆபாசத்துடன் வீடியோக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்தன. இதனால், டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது.
பிளேஸ்டோரில் ஒவ்வொரு செயலிக்கும் ஸ்டார் ரேட்டிங் கொடுப்பது அந்த செயலியை பயன்படுத்துவோர் மற்றும் தரவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில் கடந்த மாதத்தில் 4.4 ஆக இருந்த டிக்டாக்கின் ஸ்டார் ரேட்டிங் தற்போது 2.0 வாக மாறி இருக்கிறது.