இரத்தத்தின் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சாத்துக்குடி!!
நமக்குக் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உடனே டாக்டர் சாத்துக்குடி ஜூஸ் குடுங்கன்னு சொல்வார். ஏன் உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தால் அம்மா உடனே சாத்துக்குடி ஜூஸ் கொடுப்பாங்க. உடலில் ஏற்படும் நோய்யை குணப்படுத்த சாத்துக்குடிக்கு மருத்துவ குணம் அதிகளவில் உள்ளது. சிட்ரஸ் வகை பழங்களைப் போல, சாத்துக்குடியிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
சுமார் 100 கிராம் சாத்துக்குடியில், குறைந்தபட்சம் 50 மில்லி கிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இதை தவிர பொட்டாசியமும், பாசுபரசும் உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் குணமடையும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது.
மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி சில பேருக்கு உண்டாகும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்படும். சில சமயங்களில் தலைச் சுற்றல் கூட வரும். இவர்கள் தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் உடல் அசதி நீங்கும்.
நமது நாட்டில் இரத்தச் சோகையால் 68 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாக பயன்படுகிறது. சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான ஆன்டி – ஆக்ஸிடண்டுகள் மற்றும் போட்டோ கெமிக்கல்கள் , ரத்தத்தில் உள்ள நச்சுமிக்க பொருட்கள் மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி , இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும்.
தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் , அதில் உள்ள வைட்டமின் – சி மற்றும் இதர உட்பொருட்கள் , உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரிகளை எதிர்த்து போராடும் சக்தியை அதிகப்படுத்தும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுத்தால் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள், தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்தால் அதிலும் 2-3 மாதங்கள் தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.