சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.
32-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஒரு வார காலமாக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.