கொரோனா ஊரடங்கு காரணமான வாகனப் போக்குவரத்து அதிகளவில் இல்லயென்றாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய நிறுவனங்கள், சில்லரை விற்பனை விலையை நிர்ணயிக்கின்றன.
தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.73-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து 24-வது நாளாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.