வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ, எந்த காலமாக இருந்தாலும், சூரிய வெயில் பட்டால் உங்கள் சருமம் டேன் ஆகிவிடும். ஆனால், சலூன் சென்றால் தான் டேனை அகற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. நீங்கள் அந்த இரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்தே டேனை எளிதாக அகற்றி விடலாம். ஆம், நீங்கள் படித்தது சரிதான்! உங்கள் சமையலறை உங்களுக்குத் தெரியாத சிறந்த இயற்கை சருமப் பராமரிப்பு சேமிப்பாகும். எல்லோரும் இப்போது வீட்டில் இருப்பதால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாம் அனைவருக்கும் நம் சருமத்தைப் பாதுகாக்க நிறைய நேரம் உள்ளது. ஒருவேளை நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும், உங்களுக்கு ஏற்பட்டுள்ள டேனை எளிய முறையில் நீக்கி விடலாம். அதனால், இந்த லாக்டவுன் சமயத்தை உங்களுக்கானதாக பௌஅன்படுத்தி சருமத்தைப் பராமரிக்கலாம். எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்…
சமையல் அறை பொருட்கள் வைத்து டேனை அகற்ற சில வழிகள்
உங்கள் உடலில் இருக்கும் டேனை அகற்ற சில சமையல் அறை குறிப்புகள் இங்கே, இந்த 21 நாட்கள் லாக்டவுன் காலத்தில் உங்கள் சருமத்தை மெருகேற்றுங்கள்
- தக்காளி
சென்சிட்டிவ் சருமம் உடையவர்கள், சன் டேனை நீக்கக் கட்டாயம் தக்காளியைப் பயன்படுத்தலாம். தக்காளியில் இயற்கையாகவே ப்ளீச்சிங் ஏஜெண்ட் இருப்பதால், சருமத்தில் மேல் இருக்கும் கருமையைப் போக்க மிகவும் உதவியாக இருக்கும். மேலும், உங்கள் சருமத்துக்குப் பொலிவும், புத்துணர்ச்சியும் ஏற்படுத்தும். இதைப் பயன்படுத்த, தக்காளியை அரைத்து ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். பிறகு அந்த சாற்றை எடுத்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் முகத்தைக் கழுவவும். தொடர்ச்சியாகத் தக்காளியைப் பயன்படுத்தி வந்தால், விரைவாக முடிவுகளைக் காணலாம்.
- எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கு
எல்லா சமையல் அறைகளிலும் உருளைக்கிழங்கு எளிதாகக் கிடைக்கும். சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமையைப் போக்க, உருளைக்கிழங்கு ஒரு முக்கிய பொருளாக விளங்குகிறது. உருளைக்கிழங்குடன் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்த்துப் பயன்படுத்தினால், டேன் நீங்க மிகவும் உதவியாக இருக்கும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் உள்ளன மற்றும் எலுமிச்சையில் இயற்கையாகவே ஃளீச்சிங் தன்மை உள்ளது. உருளைக்கிழங்கைக் கெட்டியான பதத்தில் அரைத்துக்கொண்டு, அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்துகொள்ளவும். முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவவும்.
- கடலை மாவு
சன்டேனை அகற்றச் சமையல் அறையில் கிடைக்கும் கடலை மாவு தான் சிறந்தது. உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. அதைத் தவிர, உங்கள் சருமத்தின் பொலிவை இயற்கையாகவே திரும்பக் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது. கடலை மாவில் தயிர் சேர்த்து, கெட்டியான பதத்தில் முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடவும்.
- மஞ்சள் மற்றும் பால்
ஆம், உங்கள் சமையலறையில் இருக்கும் சிறந்த டேன் நீக்கும் பொருட்களில் பாலும் ஒன்றாகும். அதை மஞ்சளில் கலந்தால் போது. இப்போது ஒரு கின்னத்தில், பால் சேர்க்கவும். அதனுடன் கால் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்க்கவும். இந்த கலவியை காட்டன் பால் வைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் ஆனதும் கழுவி விடலாம்.
பெண்களே, இந்த லாக் டவுன் சமயத்தைப் பயன்படுத்தி நீங்கள் இழந்த பொலிவையும், புத்துணர்ச்சியையும் மீண்டும் பெற்று மகிழுங்கள்.