கொரோனாவால் இன்று உலகமே முடங்கிப் போய் கிடக்கிறது. மக்கள் எல்லாம் சமூக இடைவெளியை பின் தொடர துவங்கிவிட்டனர். காதலர்கள் தங்கள் சந்திப்புகளை எல்லாம் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆனால் நியூயார்க்கின் புரூக்ளின் நகரைச் சேர்ந்த இந்த நபர் இந்த ரணகாலத்துலையும் ஒரு குதூகலம் என இந்த நேரத்தில் மொட்டை மாடியில் நிற்கும் பெண்ணிடம் புது நட்பை ஏற்படுத்திருக்கிறார்.
ஜெர்மி கோஹன் இன்னும் இந்த இளைஞர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வசித்து வருகிறார். அங்கு மக்கள் எல்லாம் வீட்டிலேயே வசித்து வந்த சூழ்நிலையில் அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெண் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். அதை அவர் விடியோ எடுத்தார். பின்னர் அந்தபெண்ணிடம் ஹாய் என கை காட்டினார்.
பின்னர் அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேச எண்ணிய அவர் அவரது தொடர்பு எண்ணைப் பெற முயற்சி செய்தார். அதற்காக அவர் அவரிடம் உள்ள ட்ரோனை பயன்படுத்தி அதன் மீது அவரது போன் நம்பரை எழுதி அந்த பெண்ணிடம் செல்லவிட்டார். அதன் பின் அந்த பெண் அந்த ட்ரோனை எடுத்தவரது போன் நம்பரை நோட் செய்துவிட்டு அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசெஜ் செய்துள்ளார். இந்த விடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது 88k ரி- ட்வீட் மற்றும் 401k க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது.
I can’t believe this actually worked and yes this is a real story pic.twitter.com/X5KbBl0qIe
— Jeremy Cohen (@jerm_cohen) March 22, 2020