இந்த பொருட்களை பாக்கெட்டில் வைக்காதீர்கள்..!
சிலர் கவனக்குறைவால் சில பொருட்களை பாக்கெட்டில் வைப்பார்கள். சிலர் அதனால் வரும் ஆபத்தை உணராமல் சாதாரணமாக அவற்றை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி எதெந்த பொருட்களை ஒரு போது பாக்கெட்டில் வைக்கக் கூடாது என்று பார்க்கலாம். செல்ஃபோனை பலரும் தொடை பாக்கெட் அல்லது சட்டை பாக்கெட்டில் வைப்பார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிக்கும். தொடையில் வைப்பதால் fertility தொடர்பான பிரச்சனைகள் வரலாம் என ஆய்வு ஒன்று கூறுகிறது. அதேபோல் சட்டைப் பாக்கெட்டில் வைப்பதால் இதய பாதிப்புகள் உண்டாகும் என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. எனவே அடுத்த முறை கவனமாக இருங்கள்.
பணத்தையும் அசால்டாக பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள். அதிக அளவிலான பணத்தை அப்படியே பாக்கெட்டில் வைப்பதால் உங்களை அறியாமலேயே தவறுதலாக தொலைந்து போகலாம். எனவே சற்றும் சிரமம் பார்க்காமல் அதை பாதுகாப்பாக பையில் போட்டு கொண்டு செல்லுங்கள். வீட்டு சாவி, வாகன சாவி, பீரோ சாவி என முக்கிய சாவிகளை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சுற்றாதீர்கள் எப்போது எங்கு வேண்டுமென்றாலும் உங்களை அறியாமலேயே விழுந்துவிடும். தொலைந்துவிட்ட பின் வருத்தம் கொள்வதில் பிரயோஜனமில்லை.
டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், ஆதார் கார்ட், ஓட்டுநர் உரிமம், முக்கிய கடவுச் சொல் குறிப்பு போன்ற முக்கிய ஆவணங்கள், அடையாள அட்டைகளை பாக்கெட்டில் வைத்திருக்காதீர்கள். அவை கீழே விழுந்து தொலைந்து போகலாம் அல்லது அவை சேதமடைந்து கிழிந்து போகலாம். எனவே அவற்றை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வையுங்கள். பர்ஸ் இருப்பின் அதில் பணம், அடையாள அட்டைகள் என முக்கிய விஷயங்களை வைத்திருக்கக் கூடும். எனவே அதை பாக்கெட்டில் அல்லாமல் மாட்டிக்கொள்ளும் பை கொண்டு சென்றால் அதில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
தங்க நகைகள், கூளிங் கிளாஸ், கண்ணாடி பொருட்கள், சிறிய அளவிலான முக்கியப் பொருட்கள் என எந்த பொருளையும் பாக்கெட்டில் வைப்பதைத் தவிருங்கள். தங்க நகைகள், கூளிங் கிளாஸ், கண்ணாடி பொருட்கள், சிறிய அளவிலான முக்கியப் பொருட்கள் என எந்த பொருளையும் பாக்கெட்டில் வைப்பதைத் தவிருங்கள்.