இந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தைப் பாதுகாக்கலாம்…
உடலின் வெப்பத்தை சமநிலை செய்வது, கெட்ட நீரை வெளியேற்றுவது என பல வேலைகளைச் செய்யும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே சிறுநீரகத்தை சுத்தம் செய்து, சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்று இல்லாமல் பார்த்துக்கொள்ள உதவும் சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். வைட்டமின் கே நிறைந்த முட்டைகோஸ் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் , மக்னீசியம் என சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தை தரும் அனைத்து விஷயங்களும் உள்ளன. அதோடு இதயத்திற்கும் நல்லது. கொத்தமல்லி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் சிறுநீரகத்திற்கு நல்லது, சிறுநீரகக் கல் பிரச்னை இருந்தாலும் அல்லது எதிர்காலத்தில் வராமல் தடுக்கவும் கொத்தமல்லியை சாப்பிடலாம்.
காலிஃப்ளவர் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. எனவே சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்திகரிக்க காலிஃப்ளவர் உதவுகிறது. இஞ்சி சிறுநீரகத்திற்கு இன்றியமையாதது. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி நல்ல இரத்தத்தை பாயச் செய்கிறது. பெரிய நெல்லிக்காய் சிறுநீரகத் தொற்று, பாக்டீரியாக்கள் இருந்தால் அவற்றை அழித்து குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் சிவப்பு குடைமிளகாயும் பெரும் பங்கு வகிக்கிறது. அதில் வைட்டமின் சிம் ஏ, பி6 , ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து என சிறுநீரகத்திற்கு தேவையான சகல ஆரோக்கியங்களும் நிறைந்துள்ளன.ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதாலும் சிறுநீரகத்திற்கு பல வகையான நன்மைகளை அளிக்கும். ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதாலும் சிறுநீரகத்திற்கு பல வகையான நன்மைகளை அளிக்கும்.