“இந்தியா – ஆஸ்திரேலியா” டெஸ்ட் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆப்கானிஸ்தான் அணியுடனும், பிரிஸ்பேனில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியையும் நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி முதலில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நவம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
இதையடுத்து இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.
முதல் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி டிசம்பர் 11 ஆம் தேதி அடிலெய்டிலும், 3 ஆவது போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னிலும், 4 ஆவது போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியிலும் பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.
India set to play their first away day/night Test as Australia announce dates for the Border-Gavaskar series, and the inaugural Test against Afghanistan.
Details 👉 https://t.co/LgJ202Knwe pic.twitter.com/ncP7JFujyM
— ICC (@ICC) May 28, 2020
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ” பார்டர் – கவாஸ்கர் டிராபியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பிரிஸ்பேன் அல்லது பெர்த், எந்த இடமாக இருந்தாலும் கவலையில்லை ஒரு அணியாக யாரையும் எதிர்க்கும் திறமை எங்களிடம் இருக்கிறது. பகல் ஆட்டமாக இருந்தாலும் சரி, பகல்-இரவு ஆட்டமாக இருந்தாலும் சரி, நாங்கள் தயார்” என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பிரிஸ்பேன் மைதானம் ராசியானது. அவர்கள் அந்த மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் வென்றுள்ளார்கள். இந்த மைதானத்தில் தான் ஆஸ்ஹிரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
2020-21 கோடைகாலத்திற்கான ஆஸ்திரேலியாவின் முழு ஆண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச அட்டவணை மே 29 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.