ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக் விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக ஆளுநரை வலியுறுத்தினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
இந்த சந்திப்பில் ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், ஆளுநரை சந்தித்த பின் திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தினோம்.மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.என்றார்.
இது தொடர்பாக திமுக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘திமுக தலைவர் முக ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தை, தமிழக ஆளுநரிடம் வழங்கினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக தலைவர் @mkstalin அவர்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தை, மேதகு தமிழக ஆளுநர் அவர்களிடம் வழங்கினார்.
கடித விவரம்: https://t.co/2VSRwZkP1k#MKStalin #DMK pic.twitter.com/e8XSeVREi3
— DMK (@arivalayam) November 24, 2020