ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் அடுத்தடுத்து 300க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை எனும் சூழலில், இவர்கள் மயங்கி விழுந்து எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சிலபேருக்கு உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ள நிலையில், பலரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து வருவதுடன் அவர்களின் ரத்த மாதிரிகளை பெற்று சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் உள்ளூர் அதிகாரிகள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மர்ம நோய்க்கு காரணம் இருப்பதைக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் நீர் மாதிரிகள் மற்றும் இரத்த மாதிரிகள் சேகரித்தனர். மர்ம நோய்க்கு காரணம் என்ன என்பதை அறிய உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கினர்.
46 குழந்தைகள், 76 பெண்கள் உட்பட மொத்தம் 292 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 140 பேர் சிகிச்சையின் பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரடியாக தகவல்களை கேட்டறிந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.