ரஜினிகாந்த்தின் படத் தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா மற்றும் பலர் நடித்த வெற்றிப் படம் ‘படையப்பா’.இந்தப் படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் அதன் ஓடிடி தளத்தில் பதிவேற்றி இருந்தது. அது பற்றி கேள்விப்பட்டதும் ரஜினி தரப்பில் உடனடியாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். ஓடிடி தளத்திற்கு படத்தை உரிமை இல்லாத ஒருவர் அதை விற்றதைக் கண்டுபிடித்துள்ளனர்.உடனடியாக அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சட்ட ரீதியாக அது தவறு என கூறியுள்ளனர். எனவே, அமேசான் நிறுவனம் ‘படையப்பா’ படத்தை உடனடியாக அதன் தளத்திலிருந்து நீக்கிவிட்டது.மீண்டும் ‘படையப்பா’ படம் அமேசான் தளத்தில் வருமா என்பதை ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close