அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு…
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைகழக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் வகுப்புகள் ஏதும் புறக்கணிக்காமல் ஜனநாயகரீதியில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
1978-இல் தொடங்கிய அண்ணா பல்கலைகழகம் உலக அளவில் பல முன்னணி பல்கலைகழகங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டு பல ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இரண்டாக பிரித்தால் இந்த ஆய்வுகள் எல்லாம் கேள்விகுறியாகும். ஆராய்ச்சி மேம்படுத்தவே புதிய ஏற்பாடு என அரசு கூறுகிறது. ஆனால் நாங்கள் ஏற்கெனவே ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறோம். இரண்டாக பிரித்தால், புதிய கல்வி நிறுவனம் எப்படி தொடங்கி வளர வேண்டுமோ அது போன்ற சிக்கலான சூழல் ஏற்படும். நாங்கள் ஏற்படுத்தியுள்ள அடித்தளத்தை பயன்படுத்தச்முடியாமல் போய்விடும் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.