பாம்பு கடித்து உயிரிழந்த மனிதர்கள் பற்றி நமக்கு தெரியும், ஆனால் மனிதன் அடித்து பாம்பு ஒன்று உயிரிழந்த நிகழ்வு அண்டை மாநிலமான கர்நாடகத்தில் நடந்துதுள்ளது. ஊரடங்கு தளர்வை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்பட்டதால், மது பிரியர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். கோலார் மாவட்டத்தில் உள்ள கடையில் மது அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் மோட்டார் வாகனத்தில் சென்ற போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அப்போது என் பாதையில் எப்படி நீ குறுக்கிடலாம் என்று டென்ஷன் ஆனா அந்த குடிமகன், அந்த பாம்பை பிடித்து சரமாரியாக கடித்தே கொன்றுள்ளார்.
மக்கள் கருத்து
பாம்பு தன்னை கடிக்கும் முன்பே தானே அதனை அடித்து கொன்று விட்டதாக உளறிக்கொண்டே போதை ஆசாமி சென்று விட்டதாக இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிலரோ மது அருந்த பணம் இருந்தும் நொறுக்குத்தீனி வாங்க காசு இல்லாததால் பாம்பினை கடித்து சுவைத்து விட்டதாக நகைச்சுவையாக தெரிவித்தனர். மதுபோதையில் உச்சத்தில் குடிமகன் ஒருவர் கடி மகனாக மாறியது அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட இளைஞன்
இதனை அடுத்து போலீசார் பாம்பை கடித்த அந்த நபரை கைது செய்துள்ளது.
அது ஒரு சாறை பாம்பு எனவும் , அந்த பாம்பை கொன்றதற்காக அவரை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.அந்த இளைஞன் பெயர் குமார் ஆகும். மதுபானம் வாங்கி குடித்துவிட்டு போதையில் இவ்வாறு நடந்தது தெரியவந்து உள்ளது.மது கடைகள் துடங்கி ஓரே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது