தனக்கு புது வாழ்வளித்த கனடாவுக்காக எதையாவது செய்ய விரும்பிய இந்தியப் பெண் ஒருவர் செய்த செயல், மூன்று சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.
2010ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா வந்த மினு பாட்டியா, 2015இல் கனேடிய குடிமகளானார்.
தன்னை இரு கரம் நீட்டி வரவேற்று வாழ்வளித்த கனடாவை கௌரவிப்பதற்காக எதையாவது செய்ய முடிவு செய்த கால்கரியில் வாழும் மினு, கனேடிய கொடி ஒன்றை கைகளால் பின்னத் தொடங்கினார்.
ஸ்வெட்டர் பின்னுவது போல் 2016ஆம் ஆண்டு கொடி ஒன்றைப் பின்னத் தொடங்கினார் மினு. கஷ்டப்பட்டு, 18 மாதங்கள் கைவலிக்க உழைத்து அவர் அந்த கொடியை செய்து முடித்தார்.
74 சதுர மீற்றர் பரப்பளவும் 60 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்ட கொடி அது. அந்த கொடி பல கனடா தின நிகழ்வுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், பல சாதனைகளை முறியடித்து வருகிறது அந்த கொடி.
லிம்கா சாதனையாளர்கள் புத்தகம், ஆசிய சாதனையாளர்கள் புத்தகம் மற்றும் இந்திய சாதனையாளர்கள் புத்தகம் ஆகிய மூன்று சாதனை புத்தகங்களில் அந்த கொடி இடம்பெற்றுள்ளது.