கனடா: ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது… மனிடோபாவில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஊரடங்கு, கட்டம் கட்டமாக தளர்த்தப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே 4ஆம் திகதி இதற்கான தளர்வுகள் ஆரம்பமாகும் என மனிடோபா முதல்வர் பிரையன் பாலிஸ்டர் அறிவித்துள்ளார். இந்த முடக்கத்தால் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதனால், இந்த கட்டுப்பாடுகளை எளிதாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் போது, பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். ஆனால் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் கண்டறியும் பரிசோதனை மீண்டும் தொடங்கும்.
சில அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றாலும், அவை அவற்றின் திறனை வழக்கமான வணிக மட்டங்களில் 50 சதவீதமாக அல்லது 10 சதுர மீட்டருக்கு ஒருவராகக் கட்டுப்படுத்த வேண்டும்.