லுகேமியா புற்றுநோய் எனப்படுவது உடலில் உள்ள ரத்த அணுக்கள் உருவாகுவதை தடுக்கும் ஒரு விதமான புற்று நோயாகும். இவை போன்மேரோ எனப்படும் பகை மற்றும் இந்த புற்றுநோய்க்கு எதிராக நம் உடலை போராட விடாமல் தடுக்கும் தன்மை உடையது. இது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அதிகமானால் வருகிறது. உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் வெள்ளை அணுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். அதை மீறி வெள்ளை அணுக்கள் மிகவும் அதிகமாக உருவானால் இதுபோன்ற புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.பொதுவாகவே அனைவருக்கும் வெள்ளை அணுக்களும் சிவப்பு அணுக்களும் சரியான அளவிலேயே இருக்கின்றன. இதுபோன்ற புற்றுநோயானது சிவப்பணுக்களை குறைத்து வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது. இதுபோன்ற லுகேமியா புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய ஒரு சில வழிகள் இருக்கின்றது.
உடல் எடை குறைதல்
தொடர்ந்து மிக அதிகமாக உங்களது உடல் எடை குறைகிறது என்றால் நிச்சயமாக ஒரு சோதனை செய்து கொள்வதில் எந்த தவறும் இல்லை பல நேரங்களில் சோர்வாகவும் பெரிதாக உணவு உண்பதில் எந்த ஈடுபாடும் இல்லாமலும் இருக்கும். தலைவலி போன்ற பிரச்சினைகளும் அதிகமாக ஏற்படும். உங்களின் உடல் எடை டயட் உடற்பயிற்சி போன்ற எந்த பழக்க வழக்கங்களும் இல்லாமல் அதுவாகவே குறைய ஆரம்பித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் உடலை முழுமையாக பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
அடி நெஞ்சில் வலிகல்லீரல் வீக்கம் காரணமாக உங்களது நெஞ்சுப்பகுதியில் அடி பகுதியில் லேசான வலி ஏற்படும். பொதுவாக லுகேமியா புற்றுநோய் உள்ளவர்களுக்கு இது போன்ற வலி அடிக்கடி ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலே உடல் எடை அதிகமாக குறைவதோடு சேர்த்து இதுபோன்ற வலியும் உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் உடலில் உள்ள பிரச்சனை என்னவென்று பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பரிசோதித்து நோயை கண்டறிவது மிகவும் முக்கியம்.
செம்புள்ளிகள்இன்னொரு வித்தியாசமான அறிகுறிகளும் இதற்கு தென்படும். அது என்னவென்றால் உடல் முழுவதும் சதைகளில் ஆங்காங்கே சிறிய சிவப்பு நிறத்திலான புள்ளிகள் ஏற்படும். இது போன்ற புள்ளிகள் ரத்த குழாய்களில் விரிசல் ஏற்படும் இதனால் நடக்கின்றது என்று கூறுகின்றனர். இந்த சிறிய புள்ளிகளை கேபில்லரீஸ் என்று கூறுகின்றனர். இது உங்கள் கைகள் கால்கள் முதுகு பகுதிகளில் இதுபோன்ற புள்ளிகள் அதிகமாக ஏற்படும் என்று கூறுகின்றனர். மேலும் இது போன்ற புள்ளிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
காயங்கள்லுகேமியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் காயங்கள் மிகவும் விரைவாக ஏற்படும் .லேசாக கீழே விழுந்தாலும், அடிபட்டாலும் மற்றவர்களை காட்டிலும் காயத்தின் அளவு என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. சின்ன காயங்களுக்கு ரத்தம் கட்டுவது புண் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இதன் காரணம் என்னவென்றால் உடலில் தேவையான அளவு பிளேட்லெட் எனப்படும் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பது காரணமாகும்.
தொற்றுவியாதி தொற்று மிகவும் அதிகமாக இருக்கும். பாக்டீரியா போன்ற கிருமிகளின் தொற்றுகளால் இந்த வியாதி உள்ளவர்கள் மிகவும் எளிதாகத் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. சிறிய சிறிய விஷயத்திற்கும் உங்களுக்கு இன்பெக்சன் எனப்படும் தொற்று ஏற்பட்டால் நிச்சயமாக நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு காரணம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் போதுமான அளவு ரத்த அணுக்கள் சுரக்கவில்லை. ரத்த அணுக்கள் போதுமான அளவு சுரந்தாலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் பொழுது இது போன்ற சிறிய சிறிய பாக்டீரியா மற்றும் கிருமிகளை நாசம் செய்துவிடும். இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு உடலில் மிகவும் எளிதாக பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் எளிதாக நுழைந்துவிடும்.
வியர்வைஇரவில் அதிகப்படியான வியர்வை வெளிவரும். வெயில் காலங்களில் வியர்ப்பது அனைவருக்கும் சகஜம். அதிகமான வெப்பத்தினாலோ அல்லது அதிகமான வேலை செய்தாலோ, வெயிலில் நடந்தாலோ வியர்ப்பது அனைவருக்கும் சகஜம் ஆனால் இதுபோன்ற லுகேமியா புற்றுநோய் உள்ளவர்களுக்கு இரவில் மிகவும் அதிகமாக வியர்க்கும். மற்றவர்களை காட்டிலும் வியர்வையின் அளவு சற்று அதிகமாகவே இருக்கும். வெயிலின் அளவு அதிகமாக இல்லாவிட்டாலும் வெப்பம் அதிகமாக இல்லாவிட்டாலும் இரவு தூங்கும்பொழுது அடிக்கடி உடம்பில் இருந்து வியர்வை வெளி வந்து கொண்டே இருக்கும். இப்படி அடிக்கடி வியர்வை வெளிவரும் நபர்கள் மருத்துவரை உடனடியாக அணுகி பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியம்.