“மு.க ஸ்டாலின்” மீது அதிமுக சார்பில் புகார்
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பின், மு.க.ஸ்டாலின் அதற்கு வணக்கம் செலுத்தாமல் சென்றதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்திச் தொலைக்காட்சிகளில் வீடியோவுடன் செய்திகள் வெளியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தேசியக் கொடியை ஏற்றும் போது அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் எனவும், ஆனால், இதுதொடர்பான விதிமுறையை பின்பற்றாமல் தேசியக் கொடியை ஸ்டாலின் அவமதித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய பிரதிநிதித்துவச் சட்டத்தின்படியும், தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின்படியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபு முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.