மருந்து ஆலையில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று.
சிப்காட் வளாகத்தில் மருத்துவதுறை சார்ந்த மருந்து உற்பத்தி ஆலையில் 20-க்கும் மேற்பட்டோருக்கு அண்மையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
இதில், 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மருந்து தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூடக் கோரி ஆலை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு குடிகாடு ஊராட்சி தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். சிப்காட் வளாகத்தில் 30-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.