இந்தியாதகவல்கள்

நிவாரண நிதியில் சேரும் பணம்..! ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய்..!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஹம் ஹார் நகஹி மானேகே’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். நோய் தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்கள் பற்றிய பாடலுக்கு இசை அமைத்து அவர் பாடியுள்ளார். அவரடன் அவரது மகள் கதிஜா, ஸ்ருதி ஹாசன், சித் ஸ்ரீராம், நீத்தி மோகன், ஜாவேத் அலி, சாஷா திருபாதி, அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலரும் பாடி உள்ளனர். இந்த பாடலை தனியார் வங்கி ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய் வீதம் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடல் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது என்றும், அது இந்த தேசம் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புவதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.