மனிதனின் கை, கால்பாதம் ஆகியவற்றின் வழியாகத்தான் உடல் உறுப்புகளுக்கு நல்ல சக்தி உள்ளே சென்று உடலில் இருக்கும் தீய சக்தி வெளியே செல்லும் வழியில் அமைந்துள்ளது.
எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் மனிதன் நோய் இன்றி வாழலாம். பொதுவாக நடைப்பயிற்சி செய்யும் போது பிராண சக்தி மட்டும் உடலில் செல்லும். அப்படி செல்லும்போது உடலில் உள்ள தீய சக்தி கால் பாதத்தின் வழியே வெளியே சென்று விடும். எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யும் போது காலணி (செருப்பு) அணிய கூடாது. அப்போதுதான் புவிஈர்ப்பு சக்தியின் மூலமாக மனிதனின் உடலில் உள்ள தீய சக்தி வெளியேறும். எட்டு வடிவில் நடைப்பயிற்சியினை எல்லோரும் செய்யலாம். கருவுற்ற பெண்கள், புற்று நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
எட்டு வடிவ நடைப் பயிற்சி எங்கு எப்படி செய்ய வேண்டும் என்றால் மண் தரை, சிமெண்டு தரை, தார்ரோடு, சிமெண்ட் ரோடு போன்ற இடங்களில் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். மூன்றுவிதமான அளவுகளில் எட்டு வடிவ நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம்.
எட்டு வடிவ நடைபயிற்சி செய்ய வேண்டிய அளவு வருமாறு:
1. 4 அடி அகலம் 5 அடி நீளம்.
2. 6 அடி அகலம், 9 அடி நீளம்.
3. 6 அடி அகலம் 15 அடி நீளம் என 3 வகை அளவுகள் இருக்கலாம்.
அவரவர்களுக்கு இருப்பிட சூழ்நிலைக்கு ஏற்ப அளவுகளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். தரையில் சாக்பீஸ் அல்லது கோலம் கொண்டு வரைந்து கொள்ளவும். அதாவது இரு சக்கர வாகனம் ஓட்டி பழகுவது போல் இருக்க வேண்டும். இரு சக்கர மோட்டார் வாகனத்தில் எட்டு போட்டு காட்டினால் ஓட்டுநர் உரிமை பெறலாம்.
தரையில் எட்டு போட்டால் உடலில் உள்ள நோய்களை இயற்கையாக குணப்படுத்தலாம். இதன் நீளவட்டம் வடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கில் இருந்து மேற்காகவும் அமைக்கவும். முடிந்த வரை வடக்கு, தெற்குதான் இருக்க வேண்டும். இடவசதியில்லாதவர்கள் கிழக்கு, மேற்கு அமைக்கலாம்.
இரவு உணவுக்குப் பின்பு 45 நிமிடம் கழித்து வரைந்த எட்டு மீது 20 நிமிடம் நடக்கவும். முதலில் வடக்கு இருந்து தெற்காக 10 நிமிடம் பின்பு தெற்கில் இருந்து வடக்காக 10 நிமிடம் நடந்தால் நாம் உண்ட உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகி அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும் வகையில் அமையும்.
ஆழ்ந்த நிலை தூக்கம் நடைபெறும். மலச்சிக்கல் இருக்காது. மனம் ஒருநிலைப்படும். எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே உடலில் உள்ள பல வகை நோய்கள் நீங்கு.
* பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளிகரைந்து வெளியேறுவதை காணலாம்.
* இந்த பயிற்சியை இருவேளைசெய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.
* நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரைவியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும்.
* குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்.
* கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலைகண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
* உடல் சக்தி பெருகும் – ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
* ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
* பாத வலி, மூட்டுவலி மறையும்.
* சுவாசம் சீராகும் அதனால் உள் உறுப்புக்கள் பலம் பெரும்.