தகவல்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளின் ஆயுதம் – கனிமொழி எம்.பி.

விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி ட்வீட் செய்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என ரசிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தெரிவித்த நிலையில் எதிர்ப்புகள் வலுத்தன.

800 படத்தைக் குறித்த முத்தையா முரளிதரன் அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என்று ட்வீட் செய்திருந்த நிலையில்  படத்தில் இருந்து விலகும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.  அதற்குப்பின்பு விஜய் சேதுபதி அவரது மகளுடன் இருக்கும் படத்தை ட்வீட் செய்திருத்த ட்விட்டர் ஐடி (Rithik (Handle: @ItsRithikRajh), அவரது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்ததையடுத்து பலரும் இதைக் கடுமையாக கண்டித்து, அந்நபரைக் கைது செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். திமுக எம்.பி, கனிமொழி, பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டுவது கோழையின் ஆயுதம் என குறிப்பிட்டுள்ளதுடன், அந்நபரை கடுமையான தண்டனை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.