உடல்நலக்குறை காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உயிர் இழந்தார். இர்ஃபான் கானுக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 54.
சில நாள்களுக்கு முன்பு இர்பான் கானின் தாய் காலமனார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இர்பான் கான் இன்று காலமானார்.
பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் –
பல மாதங்களாக தைரியமாக புற்றுநோயுடன் போராடி வந்த இர்ஃபான் மறைந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்தாய் இறந்த 3 நாட்களில் மகனும் இறந்துள்ளது ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.
இறுதிச்சடங்கு நிகழ்வில் குடும்பத்தினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள். அனைவரும் இர்பான் கானுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.