பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. அப்போது முதல் தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சையமான மருத்துவ உபகரணமாக அறியப்படுகிறது இந்த எக்மோ கருவி.
Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்தக் கருவி, இதயம் மற்றும் நுரையீரலை செயற்கையாக செயல்பட வைப்பதற்காக பொருத்தப்படுவதாகும். பொதுவாக இதயம் மற்றும் மூச்சு சீராக இல்லாதபோது சிபிஆர் எனப்படும் உயர்வகை இதயசிகிச்சை உபகரணம் பொருத்தப்படும்.
இந்த கருவி பலனளிக்காத போது எக்மோ கருவி பொருத்தப்படும். இந்த கருவியே தற்போது எஸ்.பி.பி.க்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதனை உந்தித் தள்ளுவதுடன், ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்தக் கருவி உறுதிப்படுத்தும். மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியின் இருதயத்தை பழைய நிலைமைக்கு கொண்டு செல்லமுடியும் என்று மருத்துவர்கள் கருதும் பட்சத்தில்,எக்மோ கருவி பொருத்தப்படுகிறது.