பரோட்டா சால்னா இப்போ வீட்டிலேயே செய்யலாம்…
ரோட்டுக்கடைகளில் விற்கப்படும் பரோட்டா அவ்வளவு சுவையாக இருக்கிறதெனில் அதற்கு காரணம் அதன் சால்னாதான். அதன் சுவை எப்போதும் சலிக்காத ருசி தரும். அதை வீட்டிலேயே உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிட்டுப்பாருங்கள். அதை விட சுவை வேறென்ன இருக்க முடியும்.கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். பின் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.அடுத்ததாக தக்காளி சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் தூள் வகைகளை சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்து சுவை பாருங்கள். 2 நிமிடங்கள் கொதித்து வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துவிட்டு 15 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். குழம்பு சற்று கெட்டிப்பதத்தில் வந்திருக்கும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் பரோட்டாவுக்கான இணையாக தூள் கிளப்பும் ரோட்டுக்கடை சால்னா தயார்.