உணவுகள்தமிழ்நாடு

பனங்கிழங்கு வைத்து லட்டா…ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..

தமிழ் நாட்டின் பாரம்பரிய கிழங்கு வகை தான் பனங்கிழங்கு… பொங்கல் சமயம் வந்துவிட்டால் போதும், எங்கும் பனங்கிழங்கு தான் !! இந்த தீபாவளிக்கு பனங்கிழங்கை வைத்து வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

அவித்த பனங்கிழங்கு – 7 /8
நறுக்கப்பட்ட தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு அல்லது சிறிது கூட.
பனஞ்சக்கரை – 4-5 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பருப்புகள் (பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் ….)
நெய் – சிறிதளவு

வழிமுறைகள்

  • அவித்த பனங்கிழங்குகளை எடுத்து அவற்றின் தோலையும் நடுப்பகுதியில் இருக்கும் குச்சி போன்றவற்றையும் நீக்க வேண்டும்.
  • பிறகு நார்களை உரித்தெடுக்க வேண்டும். இயன்றளவு நார்களை நீக்கிவிட வேண்டும்.
  • பிறகு பனங்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பனங்கிழங்கு துண்டுக்கள், தேங்காய் துண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். மிகவும் பேஸ்ட் போல் வரக் கூடாது.
  • ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அதனுடன் பனஞ்சக்கரையும் பொடீத்த பருப்பு வகைகளையும் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • கையில் சிறிது நெய் தடவி அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
    மேலே சிறிது பொடித்த பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்

சுவையான பனங்கிழங்கு லட்டு ரெடி..

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.