“பண்டிகை கால ஷாப்பிங்கை தள்ளிப்போட வேண்டும்” – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனோ பரவல் குறையாத நிலையில் பண்டிகை கால ஷாப்பிங்கை 1 ஆண்டிற்கு பொதுமக்கள் தள்ளிப்போட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூவம் மற்றும் அடையாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் 1ஆண்டிற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் சென்னையில் மழை நீர் தேங்குவது குறைந்துள்ளது என்று தெரிவித்தார். 1 மணி நேரத்திற்கு 7 செ.மீ மழை பொழிவு அதற்கேற்ப வடிகால் அமைப்பு மட்டுமே சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ளது இன்று 20 செ.மீட்டர் அளவு மழை பெய்துள்ளதால் மழை நீர் வடிவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.
சென்னையில் வடிகால் பணிகள் உலக வங்கி உதவியுடன் 1400 கோடியில் மிகப்பெரிய வடிகால் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன இவற்றை 1 அல்லது 2 ஆண்டுகளில் முடிப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று இந்த பணிகள் முடிவடைந்தால் மழைக்காலங்களில் சென்னையில் தண்ணீர் தேங்குவதை வெகுவாக தடுக்க முடியும்.
கூவம் மற்றும் அடையாற்றையொட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள குடும்பங்கள் ஆக்கிரமிப்புகளை பொருத்த அளவில் கூவம் பயணிக்கும் பருத்திப்பட்டு கிராமம் முதல் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் வரை ஆக்கிரமிப்பில் இருந்த 15,500 குடும்பங்களில் 13,000 குடும்பங்கள் சட்டப்படி அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஓராண்டில் கூவம் மற்றும் அடையாற்றை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இல்லாத பகுதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மழைக்காலம் துவங்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்டிகை காலங்களில் ஒட்டி கடைக்கு செல்வதை நோய் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கு தள்ளிப் போடுவதால் தவறில்லை என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் பருவமழை காலங்களில் மாநகராட்சி எந்த எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். 1913 என்கிற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044 25384530, 04425384540 ஆகிய எண்களிலும் 24 மணி நேரமும் மழை பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சியை பொதுமக்கள் அழைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.