தகவல்கள்
நோயாளிகளின் வீடுகளுக்கே சென்ற காசநோய் மருந்து.
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் 52489 காசநோயாளிகளுக்கான மருந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் முதல் இது வரை 2451 பன்மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் உட்பட மொத்தம் 52489 பேருக்கு தன்னார்வலர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களிலேயே அவர்கள் சிகிச்சை காலம் முழுவதற்குமான மருந்து வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை நெறிமுறைகளின் படி வீடுகளில் சளி மாதிரி எடுக்கப்பட்டும், நடமாடும் எக்ஸ்ரே கருவிகளை வீடுகளுக்கே கொண்டு சென்று படம் எடுத்து, தொலைபேசி மூலமாக தேவையான் ஆலோசனைகள் வழங்கப்பட்டு நோயாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.