தமிழ்நாடு
நாளை ஆளுநர் மாளிகை முன் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின்
மருத்துவக் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட அழைத்தேன்; @CMOTamilNadu-க்கு துணிச்சல் இல்லை! களம் காண்கிறது திமுக! அக்.24-இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்!மாணவர் நலன் காப்போம்” என ட்வீட் செய்துள்ளார் மு.க ஸ்டாலின்.
ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதினேன், ‘3-4 வாரங்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்’. இதில் அவகாசம் என்பது மசோதாவை நீர்த்துப்போகச்செய்யும். அவரைச் சந்திக்கச் சென்ற தமிழக அமைச்சர்களுக்கும் இதையே தான் சொல்லியிருக்கிறார். மாணவர் நலனையும், சட்டத்தின் மாண்பினையும் திமுக பாதுக்காக்க வேண்டிய தருணத்துக்கு திமுக வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.