உணவுகள்தகவல்கள்

நம் உடலில் உள்ள அணைத்து நோய்களையும் ஓட ஓட விரட்டி அடிக்கும் கருஞ்சீரகம்!!!

தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் கருஞ்சீரகம்.இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

அதனால் நம் எல்லோர் வீடுகளிலும் கலோஞ்சி என்று சொல்லப்படுகிற கருஞ்சீரகத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

எப்படி பயன்படுத்தலாம்?

உலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை காய்கறிகள் மற்றும் கூட்டு, பொரியல் போன்றவற்றில் தூவிப் பயன்படுத்தலாம்.இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து விடுங்கள். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய் தீர

வெந்தயம் – 50 கிராம், கருஞ்சீரகம் – 25 கிராம், ஓமம் – 25 கிராம், சீரகம் – 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து  கொள்ளவும். தினமும் காலை 1 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம். ஒரு  வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கொழுப்பு குறைய உதவும்

கொலஸ்ட்ராலை குறைக்க கருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன.

அவை பொடியை விடவும் அதிகப்படியான நன்மைகளை மிக வேகமாகக் கொடுக்கும். தினமும் உணவில் இந்த பொடியையோ அல்லது எண்ணெயையோ சேர்த்து வந்தால் மிக வேகமாக உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதை உங்களால் நன்கு உணர முடியும்.

புற்றுநோய் எதிர்ப்பு

கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சமீபத்தில் இறந்து போனவர் தான் கோவா மாநில முதலமைச்சர் பாரிக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கொடிய புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியர் தான் இந்த கருஞ்சீரகம்.

இரத்த, மார்பக, பெருங்குடல், கணையம், கல்லீரல், நுரையீரல், தோல், சிறுநீரகம், புரோஸ்டேட் மற்றும் கருப்பை வாய் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களில் கட்டி வளர்ச்சியைத் தடுப்பதையும் குறைப்பதையும் விலங்கு ஆய்வுகள் காட்டுகின்றன.

எடை குறைப்பு

எந்த சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுவது தான் இந்த கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும்.பொடி செய்து வைத்திருப்பதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து அப்படியே சாப்பிட்டாலும் சரி, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் சரி சரசரவென்று வேகமாக எடை குறையும்.

நோய்த்தொற்றுகள்

கருப்பு சீரக விதை பாக்டீரியா, ஒட்டுண்ணிகள், பூஞ்சை மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் ஆகும்.கருப்பு சீரக விதை கூட வைரஸ் சுமையை குறைக்கிறது மற்றும் ஹெபடைடிஸ் சி நோயாளிகளுக்கு மற்ற குறிப்பான்களை மேம்படுத்துகிறது.

கருப்பு சீரகத்தின் எண்ணற்ற பயன்கள் உள்ளன அவற்றை கூற ஒரு நாள் பத்தாது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.