தமிழக வீரர் “மாரியப்பன்” மற்றும் “ரோஹித் சர்மா” – கேல்ரத்னா விருதுக்கு தேர்வு
ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோரி 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விளையாட்டு அமைச்சகத்துக்கு வந்து குவிந்தன. இதில் தகுதி படைத்தவர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஷேவாக், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சர்வதேச குத்துச்சண்டை வீரர் தேவராஜன் உள்பட 12 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.
கடந்த 4 ஆண்டுகளில் வீரர், வீராங்கனைகள் பெற்ற வெற்றிகள் மற்றும் சாதனைகள் அடிப்படையில் விருதுக்குரிய நபர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் நேற்று அளித்தனர். இதன்படி விளையாட்டு துறையின் மிக உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தமிழகத்தைச் சேர்ந்த தடகளவீரர் மாரியப்பன் தங்கவேலு உள்பட 5 பேரின் பேர் பெறுகின்றனர்.
மேலும், ஹிரியான மல்யுத்த வீரர் வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, விராட் கோலியைத் தொடர்ந்து நான்காவது கிரிக்கெட் வீரராக கேல் ரத்னா விருதை ரோஹித் சர்மா பெறவுள்ளார்.